தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி எஸ் சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சமூக ஊடகங்களில் கருத்துக்களும் வேகமாக பரவி வருகிறது. இந்த மாதம் இறுதியில் குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று டி என் பி எஸ் சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இல் இருந்த காலி பணியிடங்கள் 7,381 இல் இருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழக முழுவதும் எழுதினர். தற்போது அதன் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது.