வரும் தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் முன்னிலையில் இன்று முறைப்படி கட்சியில் இணைந்தனர்.
சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, கட்சியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் 500 பேர் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் 500 பேர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது
