
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார் போன்றவர்களை காப்பாற்ற முயற்சி செய்வதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, அதிமுக “சார்”களை மறந்து விட்டீரா? சென்னையில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது.
விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியில் எடப்பாடி பழனிசாமி அரசை குறை கூறி அவதூறு பதிவிட்டுள்ளார் சார்”களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை “சார்”களை நினைவிருக்கிறதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் “அதிமுக சார்களை” மறக்க மாட்டார்கள். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.