தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைந்த நிலையில் இன்னும் அதிமுக மூத்த தலைவர்களிடையும் கருத்தும் வேறுபாடுகள் நிலவுகிறது. இன்று கடம்பூர் ராஜூ உட்பட அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் கஜேந்திரன் தன்னுடைய ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திமுகவில் இணைந்துள்ளார்.

அதன்படி மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேருடன் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“பொதுவாக மாற்றுக்கட்சியினர் தங்களது சுயலாபத்திற்காகத்தான் ஆளுங்கட்சிக்கு மாறுவார்கள். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே நீங்கள் இதில் இணைந்துள்ளீர்கள். உங்களை மனதார வரவேற்கிறேன் என்றார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் முடிந்த உடனே அடுத்தடுத்து நிர்வாகிகள் ஷாக் கொடுத்து வருவது அதிமுக உடைகிறதா என்று அச்சத்தை தொண்டர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.