திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி, இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகிய அவர், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கடந்த மார்ச் மாதம் முறைப்படி அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், தி.நகர் கருணாநிதியின் மகள் மோனிஷா கருணாநிதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான என்.ஆனந்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இன்று கருணாநிதி தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி என்.ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பிற்குப் பிறகு, அவர் தன்னை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைத்துக் கொண்டார்.
தேர்தலுக்குப் பிந்தைய இந்த முக்கிய அரசியல் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
