விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் வழிபாடுகளை நடத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “கொரோனா, வெள்ளம் போன்ற பேரிடர்கள் வந்தபோதும், RSS அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மக்கள் நலனுக்காக முன்நின்று பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், அந்த அமைப்பின் ஆலோசனையை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது. சுதந்திரமான மற்றும் நூறு ஆண்டுகள் பழமையான இயக்கமான RSS அமைப்பு, அ.தி.மு.க.விற்கு வழிகாட்டுவது தவறேதுமல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், “RSS அமைப்பின் பணிகளைப் பார்த்து த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்வது நலமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.