அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த வாக்குறுதிகளில், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் மீனவர்களுக்கான உதவித்தொகை உயர்வு போன்றவை இடம்பெற்றுள்ளன.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டதால், மக்களின் குடும்பச் சுமையைக் குறைக்க இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளைக் கிண்டல் செய்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில்தான் எடப்பாடி பழனிசாமி இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இத்தகைய தேர்தல் கால வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், இது வெறும் போட்டிக்குச் சொல்லப்படும் அறிவிப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேசமயம், திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை பெண்களை வலிமைப்படுத்துவதாகவும், நிதிச்சுமையைத் தாண்டி மக்களுக்காகச் செய்யப்படும் நல்ல திட்டம் என்றும் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
