அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போதுள்ள அரசியல் சூழலில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து சசிகலா ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார். ஒரு விவசாய உதாரணத்தைக் கையாண்ட அவர், “வயலில் நெல் பயிர் விளைந்து நிற்கும் போது பலமான காற்று அடித்தால், அந்த நாற்று வளைந்து கொடுத்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். காற்று நின்றவுடன் மீண்டும் நிமிர்ந்து நிற்கும்.
அதேபோல, இக்கட்டான காலங்களில் வளைந்து கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்” என்று அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போது அதிமுகவில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டிய நேரம் இது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். “வளைந்து கொடுத்துச் சென்று வெற்றியை ஈட்ட வேண்டும்” என்று அவர் சொன்ன அந்த ‘நாற்று’ அட்வைஸ், கட்சியைக் கட்டிக்காப்பதற்கான ஒரு ரகசிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
