சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பினர். இருப்பினும் 15 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்க உதவி செய்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.