இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி மோசடி செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்பேம் அழைப்புகள் பயனர்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. அதனைப் போலவே சர்வதேச எண்களில் இருந்து மக்களுக்கு அழைப்புகளும் வருகின்றன. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த புகார்களுக்கு முதல் அளித்த மத்திய அமைச்சர், உங்கள் மொபைல் எண்ணிற்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.