தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் கொண்டாடப்படும் ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ரஜினி பற்றி நடிகர் பொன்னம்பலம் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

அதாவது ரஜினி சார் தான் 2.5 லட்சமாக இருந்த என் சம்பளத்தை ஐந்து லட்சமாக உயர்த்தியவர் என்று நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். முத்து திரைப்படம் ரீ- ரிலீஸ் குறித்து பேசிய அவர், என் வாழ்க்கையை மாற்றிய படம் முத்து. என் குடும்பத்தின் நிலையை புரிந்து கொண்டு கேட்காமலேயே அந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பை ரஜினி சார் தந்தார். இப்படி என்னை போல் பலரை வாழ வைத்ததால் தான் அவரை சூப்பர் ஸ்டார் என அழைக்கிறோம் என்று பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.