சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் – சசிகலா சந்தித்தனர்..

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரது சந்திப்பு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை ஒட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அவர்களது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் சந்தித்துள்ளனர். அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இருவரும் வந்தனர். இருவரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது..

ஓபிஎஸ்,  சசிகலா அவர்களை சந்திக்க பலமுறை முயற்சி செய்தார். ஆனால் நேரம் கொடுக்கப்படவில்லை. இன்றைய தினம் அஞ்சலி செலுத்துவதற்கு ஓபிஎஸ்-க்கு  கொடுக்கப்பட்ட நேரம் காலை 10:30 மணி.. சசிகலாவுக்கு அஞ்சலி செலுத்த நேரம் காலை 11:30 என ஒரு மணி நேர இடைவெளி கொடுக்கப்பட்டது. ஓபிஎஸ்ஐ பொருத்தவரை வேண்டு மென்றே காலதாமதம் செய்து இன்று சின்னம்மாவை பார்க்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் எடப்பாடி அணிக்கு எதிராக தங்கள் அணி பலவீனமாகி வரும் நிலையில், தாங்கள் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் அதிமுகவை மீண்டும் நாங்கள் கைப்பற்ற முடியும் என்று கட்சி கூட்டங்களில் பேசி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய டிடிவி தினகரனை  சந்தித்து இனி நானும், டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து செயல்பட போகிறோம்.

அதிமுகவை தொண்டர்கள் கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். தாங்கள் உடனடியாக சின்னம்மாவை சந்திக்க போகின்றோம். நாங்கள் மூவரும் இணைந்து செயல்படுவோம் என்று  ஓபிஎஸ் பேட்டி கொடுத்திருந்தார். சசிகலா அவர்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் தரப்பிற்கு சந்திப்பதற்கான நேரம் கொடுக்கவில்லை என்று தான் தகவல் வெளியாகி இருந்தது. பலமுறை சந்திக்க வாய்ப்பு நேரம் கேட்டுக் கொடுக்கப்படாத சூழலில் இருந்ததாகவும், இன்றைய தினம் பொதுவில் வரக்கூடிய காரணத்தினால் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரக்கூடிய சூழ்நிலை பயன்படுத்தி தற்போது சந்தித்து பேசி நலம் விசாரித்தார். இருவரும் நலம் பரஸ்பர நலம் விசாரித்து கொண்டனர்.

சசிகலா அரசியல் அரங்கில் இருந்து வெளியேறிய பிறகு, ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சந்திப்பு என்பது நடைபெறாத சூழல் இருந்து வந்த நிலையில், கடைசியாக இருவரும் ஓபிஎஸ் அவர்களுடைய மனைவி வீட்டில் இறப்பு சம்பவம் ஒன்று நடந்தது. அப்போதுதான் சசிகலா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பலரும் பல்வேறு அணிகளை கட்டமைத்து வரும் நிலையில், ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.