
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களை நேரடியாகவே சொல்லி விமர்சித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனாகவும் பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது, இனி விஜய் தளபதி கிடையாது வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்புகளோடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்.
ஊழல் அமைச்சர்கள் மற்றும் ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம். நீங்கள் சம்பாதிப்பதற்காக அரசியல் செய்யும் நிலையில் அரசியலுக்காக வருமானத்தையே தூக்கி எறிந்தவர் விஜய். நாங்கள் ஊழல் செய்துவிட்டு லண்டனுக்கு சென்று அந்த பணத்தை செலவழிக்கவில்லை.
நீங்கள் எம்.ஜி.ஆரை இழிவு படுத்தியதால் தான் அவருடைய ஆட்சியின்போது ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்தீர்கள். திமுக பிரசாந்த் கிஷோர் பற்றி பொய்யாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அண்ணாமலை திமுகவுக்காக தான் மறைமுகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை மோடிக்கு தான் உண்மையாக இருக்க வேண்டும்.
தேர்தல் வியூகங்கள் என்ற பெயரில் திமுக மற்ற கட்சிகளை உடைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் ஜாதி இல்லாத நிலையில் திமுகவில் இருப்பதே ஜாதி அரசியல் தான். சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியின் எம்எல்ஏ பேசினால் கூட காட்டப்படுவதில்லை. மேலும் ஒரே நாளில் 10 மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள் என்று கூறினார்.