தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியானது. இந்த  இடைப்பட்ட காலத்திற்கு செயல் தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆறு மாதம் வரை ஓய்வு கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை அறிந்த பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இடையே அந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.