
பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வரும் நிலையில் அதிமுகவுடன் முறிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை அண்ணாமலை வராத நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்று அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.