Lபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “அண்ணாமலை பெயரை எல்லாம் சொல்ல வேண்டாம். அந்தளவுக்கு அவர் மதிப்பு கிடையாது. அவர் ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம்” என திமுக தொண்டர்களைப் பார்த்துக் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு, பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.