தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு ரோல்ஸ் ராயல் காரை அடிப்படையாக வைத்து ராய்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் அது கிடையாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.