தமிழ் சினிமாவில் சைவம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. இந்த படத்திற்கு பிறகு தெய்வத்திருமகள் படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக சாரா நடித்து அசத்தியிருப்பார். இவர் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்த நந்தினி கதாபாத்திரத்தில் சிறுவயது நந்தினியாக நடித்திருந்தார். இவர் தற்போது தமிழில் கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சாரா சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும் சாராவின் புகைபிடிக்கும் புகைப்படங்களுக்கு தற்போது நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு விமர்சித்தும் வருகிறார்கள்.