துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் “துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டது. வான்தொட்ட கட்டிடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டது. மாண்டவன் மானுடன், உயிர் பிழைத்தவன் உறவினன். உலகநாடுகளானது ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.