
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.
View this post on Instagram
கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் ஆனது நேற்று வெளியாகி இருந்தது. அஜித் படத்தின் டிரைலர் என்றாலே செம ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நிக்சன் பாடியுள்ளாராம். இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.