மெட்ரோ ரயில்களில் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் குறித்து பேசும்போது, பெரும்பாலோர் டெல்லி மெட்ரோவையே நினைப்பார்கள். ஆனால் தற்போது ஜப்பானில் நடைபெற்ற ஒரு விசித்திரமான சம்பவம்ச மூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜப்பான் மெட்ரோ ரயிலில் இரண்டு பெண் பயணிகள் குடைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒருவருடன் ஒருவர் சண்டையிடும் காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவில், ரயிலுக்குள் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் திடீரென தீவிரமடைந்து, இருவரும் தங்கள் குடைகளை ஒருவர்மேல் ஒருவர் வீசத் தொடங்குகிறார்கள்.

 

அவர்களின் நடத்தை ஒரு தற்காப்புக் கலைப் போட்டியைப் போல் தோன்றியது. மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து பின்வாங்கிய நிலையில், சிலர் அந்தக் காட்சியை கைபேசியில் பதிவு செய்தனர். மூன்றாவது பெண் ஒருவர் சண்டையை நிறுத்த முயன்றாலும், இருவரும்  தங்களது குடைகள் உடையும் வரை தாக்கிக் கொண்டே இருந்தனர்.

இந்த 30 வினாடி வீடியோ X தளத்தில் @ShivrajXind என்ற பயனரால் பகிரப்பட்டது. அவர்,  “பாக்பட்டில் நடந்த ‘சாட் போரை’ பார்த்திருப்பீர்கள், இப்போது ஜப்பானில் நடந்த ‘குடை போரை’ பாருங்கள்! டெல்லி மெட்ரோவுக்கு மட்டும் பிரச்னை இல்லை,” என்ற பதிவுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் இதனைப் பற்றி நகைச்சுவை கலந்த கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.