மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், மாநில எம்.எல்.ஏகளுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெய்வர்தன் சிங்குக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அந்த கொள்ளையர்கள் அங்குள்ள லாக்கரை உடைத்து அதில் இருக்கும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த  எம்.எல்.ஏ ஜெய்வர்தன் அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.