
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது அமலில் இருக்கிறது. அதே வகையில் கொல்கத்தாவிலும் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. இங்கிருந்துசம்பவ நாளில் நியூ காரியாவில் இருந்து தக்ஷிணேஷ்வர் நோக்கி ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் பாதி வழியில் நின்றது.
அதாவது மெட்ரோ ரயில்வே நிலையத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் ரயில் பாதி வழியில் நின்றது. இந்நிலையில் மின்சார துண்டிப்பை சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் ரயில் சுமார் 14 நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவம் பயணிகளின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.