தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அடிக்கசி கிசுகிசுக்கள் பரவி வருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான தனது காதல் உண்மையானது என்று உறுதிப்படுத்தினார். ‘காதல் கதைகள் 2’ படப்பிடிப்பில் இவர்களின் காதல் மலர்ந்தது என்றும் அவர் என்னை நன்றாக புரிந்துகொள்கிறார்.  விஜய் வர்மா எப்போதும் என்னைக் காப்பார் என்று நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.