பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐபில் தொடரானது வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் கேகேஆர் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடர்காக அனைத்து அணியினரும் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை வான்கடே  மைதானத்தில் உள்ள பிசிசி அலுவலகத்தில் இன்று  கேப்டன்களோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அணிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் ஐபிஎல் விதிமுறைகள் குறித்தும், பந்தில் எச்சிலை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது., பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒருபுறம் லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். கொரோனாவின் போது எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையால்,ரிவர்ஸ் ஸ்விங் அழிந்த நிலையில் தான் இதை செய்வதில் மனனான முகம்மது ஷபி இந்த கோரிக்கையை வைத்திருந்தார். இந்த நிலையில்  தான் ஐபிஎல் தொடருக்காக இந்த தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.