சினிமா படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு நேர்ந்த மிகவும் கசப்பான மற்றும் கொடூரமான அனுபவம் குறித்து பிரபல நடிகை தாரணி சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் திறந்த மனதுடன் பேசியிருப்பது தற்போதே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அவர் அளித்த பேட்டியில், படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது அங்கு பணியாற்றிய கேமராமேன் ஒருவர் தன்னை ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்யுமாறு தவறான எண்ணத்தோடு கேட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குச் சற்றும் உடன்படாத நடிகை தாரணி, கண்டிப்பான முறையில் “முடியாது” என்று கூறி உடனடியாக அந்தத் தவறான அழைப்பை நிராகரித்து அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த கேமராமேன் தன்னிடம் பழிவாங்கும் நோக்கில் நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதிக வெப்பத்தை உமிழும் சக்திவாய்ந்த லைட்களை, வேண்டுமென்றே தன் மீது படுமாறு திருப்பி வைத்துத் தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டதாகக் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சமயத்தில் தனது முகமே தீப்பற்றி எரிந்தது போன்ற கடுமையான எரிச்சலையும் வலியையும் உணர்ந்ததாகத் தெரிவித்த தாரணி, அது விபத்து அல்ல என்றும், தான் அட்ஜஸ்ட்மென்ட்டுக்குச் சம்மதிக்காததால் அந்த கேமராமேன் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்த சதி என்றும் தனக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
