தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மைய பேருந்து நிலையத்தில் பரிதவிக்கும் நிலையில் ஒரு குழந்தை தனியாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணை அடையாளம் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலருடன் ஓடிச் சென்றுள்ளதாகவும், குழந்தையை துணையாக வைத்துக்கொள்வது சிரமம் என நினைத்து பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்தது. இதனைக் தொடர்ந்து, குழந்தையின் தந்தையை தொடர்புகொண்ட போலீசார், அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு குழந்தையை அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ఇన్స్టాగ్రామ్లో పరిచయమైన వ్యక్తి కోసం కన్నబిడ్డను దిక్కు లేని అనాధగా బస్స్టాండులో వదిలేసి వెళ్ళిపోయిన తల్లి
నల్గొండ బస్స్టాండులో చోటు చేసుకున్న ఘటన
ప్రియుడు తనవెంట రమ్మని వెంటపడడంతో… మానవత్వం మరిచి ముక్కుపచ్చలారని కన్నబిడ్డను దిక్కులేని అనాధగా వదిలేసి వెళ్లిన తల్లి… pic.twitter.com/mkZZjK0jh2
— Telugu Scribe (@TeluguScribe) July 27, 2025
“>
