2023 ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்துவிட்டது. இந்த நன்னாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். அதை வாங்குவதற்கு நிறைய பேர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பலரிடம் கைவசம் பணம் இருக்காது.  எனவே அட்சய திருதியான இன்று தங்கம் வாங்க முடியாதவர்கள், கவலையை விடுங்க.

அதற்கு பதிலாக கல் உப்பு, குண்டு மஞ்சளை என இந்த இரண்டு பொருட்களையும் பணம் கொடுத்து வீட்டில் வாங்கி வைத்தால் போதும், தானியம் மட்டுமல்லாமல், ஆடை, ஆபரண சேர்க்கையும் பெருகும் என்பது ஐதீகம். குண்டு மஞ்சளை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சொத்து சேர்க்கை ஏற்படும். கல் உப்பை ஜாடியில் நிரப்பி வைத்தால், கடன் பிரச்சனைகள் சரியாகும்.