உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் முரட்டுத்தனமான நாய் இனங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பிட்புல். இதன் பிடியில் ஒருமுறை சிக்கினால் தப்புவது கடினம் என்பதால் பல நாடுகளில் இதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படிப்பட்ட முரட்டுப் பிட்புல்லையே ஒரு இந்தியத் தாய் தனது அதட்டலான பேச்சால் ‘பூனைக்குட்டி’ போல மாற்றிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நவாப் (Nawab) என்ற அந்த நாய் உணவு உண்ணாமல் அடம் பிடித்துக் கொண்டும், வீட்டில் உள்ளவர்களைப் பார்த்து பயங்கரமாகக் குறைத்துக் கொண்டும் இருக்கிறது.
View this post on Instagram
இதைக் கண்ட அந்த வீட்டின் தாய், சற்றும் பயப்படாமல் தனது வழக்கமான ‘அம்மா’ பாணியில், “மரியாதையா சாப்பிடு, இல்லைன்னா உன் கொட்டத்தை அடக்கிடுவேன்” என்று கண்கள் உருள மிரட்டுகிறார்.
அம்மாவின் அந்த அதிரடியான குரலையும், கோபமான பார்வையையும் பார்த்த அடுத்த நொடியே, அந்த முரட்டுப் பிட்புல் அப்படியே அடங்கிப் போய், ஒரு சமத்துப் பிள்ளை போல அமைதியாக உணவைச் சாப்பிடத் தொடங்குகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியத் தாய்க்கு முன்னால் பிட்புல் என்ன, பேயே வந்தாலும் அடங்கித்தான் ஆக வேண்டும்” என்றும், “பிட்புல்லைப் பூனையாக மாற்றிய அம்மாவின் சக்தி இதுதான்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் அம்மாவின் அதட்டலுக்கு முன்னால் அனைவரும் குழந்தைதான் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
