பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிலோ மீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள ஆன்சன்ஸ் விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது.

11 நாட்கள் ஓய்வு இல்லாமல் உணவின்றி பயணம் மேற்கொண்ட அந்த பறவையின் செயற்கைக்கோள் டேக் வாயிலாக கண்காணிக்கப்பட்டது. பறவை கடந்த தூரம் லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு இடையேயான இரண்டரை பயணங்களுக்கு சமம் (அல்லது) கிரகத்தின் முழு சுற்றளவில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு முன்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு இதே இனத்தை சேர்ந்த பறவை 217 மைல் பறந்ததே சாதனையாக இருந்தது.