தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் சில தினங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 வயது  சிறுமியான கிறிஸ்டன் கோவிந்தர் பங்கேற்றிருக்கிறார். போட்டியில் பங்கேற்ற அந்த சிறுமியின்  தலைமுடி வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுமியின் குடும்பத்தினரின் முன்பு இந்த துயர சம்பவம் அரங்கேறியது. உடனே, பார்வையாளர்கள் பகுதியிலிருந்த துணை மருத்துவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சை மேற்கொண்டார்கள். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.