
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் டிராகன். ஓ மை கடவுளே என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்,கையாடு லோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் சினேகா, மிஸ்கின், விஜே சித்து என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இன்று இந்த படம் திரையரங்குகளில் செம மாஸாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இதனையடுத்து படத்தை ஸ்பெஷலாக பார்த்த நடிகர் சிம்பு படத்திற்கு பிளாக்பஸ்டர் என்று விமர்சனம் கொடுத்தார். இந்த படம் ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் இந்திய அளவில் படம் 3.35 கோடியும், தமிழகத்தில் மட்டும் 2.11 கோடியும் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.