தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் பூஜை அண்மையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், இன்று  மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் சூட்டிங்காக தற்போது படக்குழுவினர் விமானத்தில் காஷ்மீருக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் தளபதி 67 படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு சோனி மியூசிக் youtube தளத்தில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.