லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சென்ற ஆண்டு அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வெளியாகியது. இப்போது ஜெயம்ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது.

அதோடு 2 புது படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் அதில் 1 திரைப்படத்தை மித்ரன்ஜவகரும், மற்றொரு படத்தை மோகன் ராஜாவும் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மித்ரன் ஜவஹர் இயக்கிய யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஏற்கனவே நயன்தாரா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் ராஜா இயக்கும் படம் தனிஒருவன் 2ம் பாகம் ஆகும். இப்படத்தின் முதல் பாகத்தில் ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். தற்போது 2ஆம் பாகத்திலும் இவர்கள் இணைகின்றனர்.