தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். வில்லன், ஹீரோ உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், இப்போது துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். அண்மையில் வம்சி இயக்கத்தில் வெளியாகிய வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்து இருந்தார். தற்போது சரத்குமார், ராகவா லாரன்ஸ் “ருத்ரன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங்கின்போது சரத்குமார், இரவு 11 மணிக்கு மேல் தன்னால் நடிக்க இயலாது என ராகவா லாரன்ஸிடம் கூறி உள்ளார். ஆனால் படத்தின் குறிப்பிட்ட காட்சியை அமைக்க 11 மணிக்கும் மேல் ஆகி இருக்கிறது. இதன் காரணமாக கோபமடைந்த சரத்குமார் யாரிடமும் கூறாமல் சூட்டிங்கின்போது  பாதியில் சென்று விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த லாரன்ஸும் கோபத்தில் வீட்டிற்கு சென்றுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.