CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று கனமழைக்கும் நாளை முதல் நான்கு நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூருவில் நாளை போட்டி நடைபெற உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது RCB அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

ஏனென்றால் இந்த போட்டியில் பெங்களூரு அணை தோல்வி அடைந்தாலோ அல்லது மலையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ சிஎஸ்கே அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.