தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.