அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழக உயர்கல்வித்துறை பொறுப்பு  கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்த கைத்தறி மற்றும் காதி தொழில்துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை  அமைச்சர் காந்திக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ராஜ் பவன் செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி குறிப்பை கவர்னர் உடைய செயலாளர் தற்போது செய்தி குறிப்பாக வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலமாக இன்றிலிருந்து அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் நாளை முதல் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. அவர் தென் மாவட்டங்களில் தற்போது முதலமைச்சருடன் இருக்கின்றார். இதில் மற்றொரு முக்கியமான விஷயம் சொல்லியுள்ளார்கள். காதி மற்றும் கிராம தொழில்கள் துறை ராஜகண்ணப்பனிடம் இருந்தது கைத்தறி துறை அமைச்சர் காந்திக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் முக்கியமான ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. 2021 இல்  ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அதற்கு பிறகு 2022 மார்ச் மாதத்தில் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு டிசம்பர் மாதத்தில்  உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார். அதற்கு பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக செந்தில் பாலாஜி இடமிருந்த இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சரவையிலும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.