
தமிழ்நாட்டில் இன்று மதியம் ஒரு மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் ஏற்கனவே இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட இருந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதன்படி கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.