
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன் பருப்பு கொள்முதல் செய்வதற்கு குடிமை பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி படிப்படியாக கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நவம்பர் மாதம் முதல் பொது மக்களுக்கு பருப்பு, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாத்தி முழுமையான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொள்முதல் ஆனது நேரடியாக மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது.