தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஓய்ந்தபாடில்லை! முதலமைச்சர் ஜோசப் விஜயைப் பாராட்டிய ஒரே காரணத்திற்காக அமமுக-விலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், டிடிவி தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

“சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பேச யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” எனத் தெறிக்கவிட்ட அவர், அழைப்பு வந்தால் தவெக-வில் இணைவது 100 சதவீதம் உறுதி என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நாளை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி தொடரத் தனது ஆதரவை வழங்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த காமராஜ், தற்போது ‘தளபதி’ பக்கம் சாய்ந்திருப்பது அமமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டை வட்டாரத்தில் தவெக-வின் பலத்தை மேலும் கூட்டியுள்ளது.