இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தை பொறுத்து மட்டுமே உள் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 2021-ம் வருடம் தமிழகத்தில் திடீரென்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு 102.51 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் அடிப்படையில் விலையானது குறைக்கப்பட்டது.

அந்த வகையில் பெட்ரோல் லிட்டருக்கு 102.63 ரூபாய்கும், டீசல் லிட்டருக்கு 94.24-க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சீராக இருந்தால் அடுத்த காலாண்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.