தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தாலும் மறுபக்கம் அமைச்சர்கள் அடுத்தடுத்து வருமானவரித்துறை வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானவரித்துறை இடம் சிக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இரு அமைச்சர்கள் குடும்பத்தினரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது போல் தற்போது அமைச்சர்களின் தங்கம் தென்னரசு மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்குகளையும் நீதிமன்றம் கையில் எடுத்துள்ள நிலையில் தற்போது திமுக அரசுக்கு இது புதிய தலைவலியாக அமைந்துள்ளது.