உத்தர பிரதேஷ் மாநிலம் ஜாரி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் வர்மா. இவரது மகள் காயத்ரி தனக்கு பிடித்த ஆடையை வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயத்ரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு மற்றொரு அதிர்ச்சிகர தகவல் தெரிய வந்துள்ளது.

அதாவது காயத்ரியின் நெருங்கிய தோழியான புஷ்பா தேவி பிரஜாபதியும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் இவர்கள் இருவரும் ஒருவரது பெயரை மற்றொருவர் கையில் பச்சை குத்தி இருந்ததாகவும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பதும் தெரியவந்துள்ளது.