உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் ஆட்டோ ஓட்டுனர் சாலை விதிமுறைகளை மீறி 14 மாணவர்களை ஒரே ஆட்டோவில் ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்கேடி சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்த பல குழந்தைகள் ஒரே ஆட்டோவில் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த ஆட்டோவை நிறுத்திய போது முன்பக்க இருக்கையில் மூன்று மாணவர்கள் பின்புறத்தில் 11 மாணவர்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒரு ஆட்டோவில் 14 மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.