மத்தியபிரதேச மாநிலத்தில் கால்களால் சோமோஸ் தயாரிக்க மாவு பிசையும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜபல்பூர் பகுதியில் கைகளால் மாவு பிசைவதற்கு பதிலாக ஒருவர் கால்களால் பாத்திரத்துக்குள் நின்று மாவு பிசைகிறார். இதிலிருந்து தான் சோமோஸ் தயாரிக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார் கோஸ்வாமி மற்றும் சச்சின் கோஸ்வாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.