பொதுவாக பள்ளம் தோண்டுதல், கட்டிட வேலைகள் உள்ளிட்ட கடுமையான பணிகளுக்குப் பயன்படும் பொக்லைன் எந்திரம், இப்போது உணவுப் சமைக்க கரண்டியாக பயன்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக, மிகப்பெரிய அண்டாவில் குழம்பு சமைக்கப்படும் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குழம்பு அடுப்பில் சரியாக கிளறப்படுவதற்காக, மனிதர்கள் கரண்டி அல்லது கடாய்போன்ற சாதாரண சமையல் கருவிகளை அல்லாமல், நேரடியாக ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியைப் பயன்படுத்துகிறார்கள். எந்திரத்தின் முனையில் ஒரு பெரிய தட்டுப்போன்ற அமைப்பை பொருத்தி, அதைக் கொண்டு குழம்பை கிளறும் விதம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்தக் காணொளி எங்கு படமாக்கப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. மேலும், இது நிஜமானதா, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் விருந்துக்கு இத்தகைய முறையில் பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்படுவது பலருக்கு ஆச்சரியமளித்தாலும், சிலரால் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் எழுக்கப்படுகின்றன.
