
இந்தியாவில் பெரும்பாலும் கடைகளில் துணி பைகள் விற்பனை செய்யப்படும். சில நேரங்களில் அதிகப்படியான பொருள் வாங்கினால் இது இலவசமாக கொடுக்கப்படும். இதன் விலை தோராயமாக 100 ரூபாய்க்குள் தான் இருக்கும்.
ஆனால் இதை வெளிநாட்டில் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம். அது உண்மைதான். அதாவது அமெரிக்க பல்பொருள் அங்காடியான நோர்ஸ்ட்ரோமின் தங்களது இணையதளத்தில் துணிப்பையை 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி நெட்டிசன்கள் மத்தியில் பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது.