உலக அளவில் மக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் தகவல் தொடர்பு செயலியாக whatsapp விளங்கி வருகிறது. whatsapp செயலியில் வீடியோ கால் செய்வதற்கு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப்பில் வீடியோ காலின் பொழுது திரைகளை பகிர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதைவிட முக்கியமான பெரிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்யும்பொழுது ஆடியோக்களை பகிர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது வீடியோ அழைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மறு வரையறை செய்யும். மேலும் பயனர்கள் வீடியோ கால் செய்து கொண்டே இசையையும் கேட்கலாம். இந்த புது அப்டேட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.