மூத்தக்குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் இருக்கிறது. இதில் சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் SBI மூத்தக்குடிமக்கள் கால வைப்புத் திட்டம். நீங்கள் அண்மையில் ஓய்வு பெற்று உங்களது கையில் பெரிய தொகை கிடைத்து இருந்தால், SBI-ன் மூத்தக்குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்வது நீண்டகாலக் கண்ணோட்டத்தில் சிறந்த தேர்வாகும்.

SBI-ன் 10 ஆண்டு முதிர்வுத்திட்டத்தில் ஒரு மூத்தக்குடிமகன் ரூபாய்.10 லட்சத்தை மொத்தம் ஆக முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். SBI FD கால்குலேட்டரின் படி முதலீட்டாளர் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வுக் காலத்தில் மொத்தம் ரூ. 21,02,349 பெறுவார். இதில் வட்டி வாயிலாக ரூ.11,02,349 நிலையான வருமானமானது கிடைக்கும்.

சென்ற பிப்.15-ம் தேதி முதல் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்குரிய வட்டி விகிதங்களை 0.25% எஸ்பிஐ உயர்த்தி இருக்கிறது. வங்கிகள் சார்பாக கடன்களை அதிக விலைக்கு உயர்த்துவதோடு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படுகிறது. முன்பாக SBI FD மீதான வட்டி விகிதங்களை கடந்த வருடம் டிச.13 அன்று உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.